சட்டையில் பட்டன் போடுங்க டோலி... மாளவிகாவின் பலே கவர்ச்சி!

திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (11:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதையடுத்து தமிழில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பெரும் பிரபலமாகிவிட்டார். ஒரே படத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை மயக்கிவிட்டார். படம் பார்த்துவிட்டு மாலு... மாலு என தளபதி ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். அதையடுத்து தனுஷின் D4 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சட்டையை கழட்டிவிட்டு உள்ளே இருக்கும் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கிவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்