ஆதிபுருஷ் பட வாய்ப்பை வேண்டாம் என்ற தெலுங்கு நடிகர்!

சனி, 24 ஜூலை 2021 (16:45 IST)
நடிகர் மகேஷ் பாபு ஆதிபுருஷ் என்ற பிரம்மாண்ட பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷர்மா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் முதலில் ராமன் கதாபாத்திரத்தில் நடிக்க மகேஷ் பாபுவிடம்தான் அனுகப்பட்டதாம். ஆனால் அவர் அந்த கதையை நிராகரிக்கவே அது பிரபாஸுக்கு சென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்