ஆப்பிரிக்காவில் நடக்கும் ஆக்‌ஷன் அட்வெண்ட்ச்சர்… ராஜமௌலியின் அடுத்த படம்!

வெள்ளி, 23 ஜூலை 2021 (10:57 IST)
இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து இயக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவின் பிரம்மாண்டமான இயக்குனராக உருவாகியுள்ளார் ராஜமௌலி. பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் வெற்றி அவரின் படங்களின் மார்க்கெட்டை பல மடங்கு விரிவாக்கியுள்ளது. அதையடுத்து இப்போது ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவரின் அடுத்த படம் பற்றி அவரின் தந்தை விஜயேந்திர பிரசாத் பேசியுள்ளார். ராஜமௌலியின் அடுத்த படம் ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒரு சாகச சினிமாவாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார் என்பது மட்டுமே இப்போது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்