நடிகர் மஹத் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பரீச்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் தினக்கூலி சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தனனுடைய சம்பளத்தை குறைக்க முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து கூறிய நடிகர் மஹத், சமூகத்தின் சூழ்நிலையும், சினிமாவின் நிலைகளையும் கருதி நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அந்தவகையில் தற்போது நானும் என் சம்பளத்தில் இருந்து 50% குறைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளேன். இன்னும் நிறைய வித்யாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை என கூறினார்.