பாலிவுட் சூப்பர் ஸ்டார் குடும்பமான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகள் ஆராதனா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுபற்றி அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் தங்கள் சமூகவலைதளங்களில் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அவர்கள் விரைவில் மீண்டுவரவேண்டும் என தங்கள் பிராத்தனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.