காந்தாரா படத்தின் தமிழக பிஸ்னஸ் இத்தனைக் கோடியா?... புத்திசாலித்தனமாய் மூவ் பண்ணிய ஹோம்பாலே பிலிம்ஸ்!

vinoth

செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (09:57 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள்.

படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியிருந்தார். இதன் ஷூட்டிங் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்த நிலையில் சமீபத்தில் நிறைவுற்றது. படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக வியாபாரம் பற்றி ஆச்சர்யமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ஏரியா வாரியாக பிரித்து பிரித்து சுமார் 33 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். இந்த படத்தின் முதல் பாகம் தமிழ்நாட்டில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதால் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்