எனக்கு ஓப்பன்ஹெய்மர் படம் பிடிக்கவில்லை… நடிகர் மாதவன் சொன்ன காரணம்!

vinoth

சனி, 25 ஜனவரி 2025 (09:49 IST)
ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் ஓப்பன்ஹெய்மர். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி அனுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.

சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் 7 விருதுகளை வென்று சாதித்தது. உலகளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக ஓப்பன்ஹெய்மர் முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் இந்த படத்தைப் பாராட்டி விமர்சனங்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இப்போது நடிகர் மாதவன் ஒரு நேர்காணலில் தனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை எனப் பேசியுள்ளார். மேலும் அதற்கான காரணமாக “ஓப்பன்ஹெய்மர் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மக்கள் மரணம் அடைவதற்குக் காரணமாக இருந்தவர். ஒரு இன அழிப்புக்கே அவரின் கண்டுபிடிப்பு பயன்பட்டது. அதனால் அந்த குண்டுவெடிப்புக்கு அடுத்த நாள் அவர் எப்படி உணர்ந்தார், அவரின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் எல்லாம் அவரை எப்படிப் பார்த்தார்கள் என்பதைக் காட்டியிருக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்