சாதி ரீதியாக சர்ச்சை பேச்சு.! அவமானப்படுத்தியதாக பாஜக எம்பி மீது ராகுல் புகார்..!!

Senthil Velan

செவ்வாய், 30 ஜூலை 2024 (21:11 IST)
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய விவகாரத்தில் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், என்னை அவமானப்படுத்தி விட்டார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
 
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து பேசிய பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், சாதி பற்றி தெரியாத ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார் என்றும் யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை என்றும் ராகுல் காந்தியை மறைமுகமாக சாடினார்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ராகுல்,  ஆதிவாசிகள், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளை யார் எழுப்பினாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று விமர்சித்தார்.  

ALSO READ: 120 அடியை எட்டியது மேட்டூர் அணை.! உபரிநீர் வெளியேற்றம்.! வெள்ள அபாய எச்சரிக்கை..!!
 
அனுராக் தாக்கூர் என்னை துஷ்பிரயோகம் செய்து அவமானப்படுத்தியுள்ளார் என்றும் அதற்காக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்