களவாணி படத்தில் நம்ம கேஜிஎஃப் யாஷா? இணையத்தைக் கலக்கும் புகைப்படம்!

வியாழன், 21 ஏப்ரல் 2022 (16:16 IST)
யாஷ், கேஜிஎஃப் 1 மற்றும் 2 ஆகிய படங்களின் மூலம் இப்போது பேன் இந்தியா ஹீரோவாகியுள்ளார்.

விமல், ஓவியா நடித்து 2010ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் களவாணி. இயக்குனர் சற்குணம், ஓவியா ஆகியோருக்கு அறிமுக படமாகவும், வெற்றி படமாகவும் அமைந்தது களவாணி. படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது பாகமான “களவாணி 2” பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ஜூலை 5 அன்று ரிலிசானது.

இந்நிலையில் தற்போது கேஜிஎஃப் 2 திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த யாஷ் களவாணி படத்தின் ரீமேக்கான கிராதகா என்ற படத்தில் 2011 ஆம் ஆண்டு நடித்துள்ளாராம். இது சம்மந்தமான புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த படத்திலும் ஓவியாவே கதாநாயகியாக நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்