ஆனால் ரிலீஸானது முதலே எதிர்மறை விமர்சனங்களே வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம் பலரும் படத்தை ஒரிஜினல் படத்தோடு ஒப்பிடுவதே என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் மாதவனின் சமூகவலைதளப் பக்கத்தில் இந்த படம் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனக் கூறி இருந்தார். அவருக்கு பதிலளித்த மாதவன் அடுத்த முறை உங்களைக் கவரும் விதமான படங்களில் நடிக்கிறேன் எனக் கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மாதவனின் இந்த அனுகுமுறை சமூகவலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.