மாநாடு படத்தின் புதிய ஸ்டில்ஸ்… இணையத்தில் வைரல்!

திங்கள், 15 நவம்பர் 2021 (14:54 IST)
நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி அன்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அண்ணாத்த படத்துக்கு பெரும்பாலான திரைகள் ஒதுக்கப்பட்டதால் நவம்பர் 25 ஆம் தேதிக்கு வேறு வழியில்லாமல் தள்ளிவைக்கப்பட்டது. இது சிம்பு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

ஆனால் அதுகூட இப்போது ஒருவகையில் அந்த படத்துக்கு நல்லதாக அமைந்துவிட்டது. தீபாவளிக்கு பிந்தைய நாட்களில் கனமழையால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் கூட்டம் இல்லை. மேலும் சில திரையரங்குகள் காட்சிகளை ரத்து செய்துள்ளன. இதனால் இப்போது 25 ஆம் தேதி வரும் மாநாடு திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதனால் எல்லா ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்த புது ஸ்டில்ஸ்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இன்று படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்