திடேட்டரில் சொதப்பினாலும் ஓடிடியில் கலக்கும் மாமனிதன்… இயக்குனர் சீனு ராமசாமிக்கு வந்த வாய்ப்பு!

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:53 IST)
மாமனிதன் திரைப்படம் சமீபத்தில் ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸானது.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக சொல்லப்பட்டது.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வாங்கி வெளியிட்டார். சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் மாற்றப்பட்டது. கடைசியாக ஜூன் 24 அம் தேதி ‘மாமனிதன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ஆனாலும் நல்ல விமர்சனங்கள் இருந்தும் திரைப்படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இல்லை. இந்நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. ஜூலை 155 முதல் ஆஹா தமிழ் ஓடிடியில் ‘மாமனிதன்’ ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

இந்நிலையில் தியேட்டருக்கு நேர்மாறாக ஓடிடியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இப்போது மாமனிதன் இயக்குனர் சீனு ராமசாமியை ஆஹா ஓடிடி அணுகி நேரடி ஓடிடி திரைப்படம் ஒன்றை இயக்கித் தர கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்