இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமலும், தயாரிப்பு நிறுவனமான லைகாவும் இழப்பீடு அளித்துள்ளனர். ஆனாலும் இந்த விபத்தால் தன் அரசியல் இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வது என முடிவு செய்துள்ளாராம்.
அதில் ‘லைகா நிறுவனம் தயாரிப்புக்கு தேவையான செலவுகளை ஏற்றுக்க்கொண்டு படப்பிடிப்பில் எந்தவித குறுக்கீடும் செய்யக் கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதனால் லைகா சார்பில் ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரும், ஷங்கர் சார்பில் ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரும் நியமிக்கப்பட்டு அவர்களே முழு படப்பிடிப்பு ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு சம்மந்தமாக படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும் ஷங்கருக்கும் பொறுப்பு இருக்கிறது. இத்தனை வருட அனுபவம் உள்ள நீங்கள் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டுபிடிப்பது எளிதானது. இதனால் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த பிரச்சனையை எதிர்கொள்வதை விடுத்து லைகாவை குற்றம் சொல்வது சரியில்லை’ என சொல்லியிருக்கிறது.