கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர். இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் பிரண்ட்ஷிப் என்ற படத்திலும் , நடிகர் ஆரிக்கு ஜோடியாக பெயரிடப்படாத மற்றொரு புது படமொன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டீடிவாக இருந்து வரும் லாஸ்லியா அழகிய வெள்ளை நிற உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதை தனது ட்விட்டரில் வெளியிட ரசிகர் ஒருவர் சம்மதமேயின்றி லாஸ்லியா கர்ப்பமாக இருக்கிறாரா என கேட்டு கமெண்ட்ஸ் செய்துள்ளார்.