மாஸ்டர் படத்துக்குப் பின்னர் இப்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். ஆனால் கமல்ஹாசன் தேர்தல் பிஸியால் இப்போதைக்கு விக்ரம் படத்தைக் கிடப்பில் போட்டுள்ளார். இதனால் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு நடிகரான பிரபாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் லோகேஷ் கனகராஜை ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.