இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் முன்னதாக இயக்கிய கைதி திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களும் இடம்பெற்றிருந்தனர். இறுதி காட்சியில் சூர்யா தோன்றியது அடுத்த பாகத்திற்கான ஆரம்பம் என கூறப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் நிறுவனமான மார்வெல் படங்களில் இதுபோல ஒரு படத்தில் இன்னொரு கதாப்பாத்திரத்தின் தோற்றம் என ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி அடுத்தடுத்த பாகமாக எடுப்பார்கள். இதை சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று சொல்வார்கள்.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல தற்போது லோகேஷ் தமிழில் தனது சினிமாட்டிக் யுனிவர்ஸை தொடங்கியுள்ளார். அதை வரவேற்கும் விதமாக மார்வெல் ஸ்டைலில் லேகேஷின் படக்காட்சிகளை வைத்து ரசிகர் ஒருவர் தயார் செய்துள்ள இண்ட்ரோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் Lokesh Cinematic Universe என்ற பெயர் ட்ரெண்டாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “Lokesh Cinematic Universe (LCU) என்ற பெயர் மக்கள் கொடுத்தது. இனி வரும் காலங்களில் கைதி, விக்ரம் படங்களில் தொடர்ச்சியாக வரும் படங்களில் LCU என்ற பெயர் இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.