லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தற்போது இருந்து வருகிறார். அது மட்டுமில்லமல் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலமாக ஃஃபைட் கிளப் என்ற திரைப்படத்தை வெளியிட்டார். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.
இந்த படத்தை ஃபைனலி சேனலின் பட வீடியோக்களை இயக்கிய நிரஞ்சன் இயக்குகிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் வழங்குகிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படவுள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் லோகேஷும் நடித்துள்ளார். விரைவில் படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் அறிவிகக்ப்படும் என தெரிகிறது.