இன்றைய நிலவரப்படி, தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் என்றால் மிகையாகாது. மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவர் அடுத்த படத்தை ரஜினியை வைத்து இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. லாக்டவுன் காலத்தில் அந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது நண்பர்கள் மற்றும் நல்ல திரைக்கதையோடு வாய்ப்புக்கு காத்திருப்பவர்களுக்காக இந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல் தயாரிப்பாக மேயாத மான் புகழ் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் படம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது என சொல்லப்படுகிறது.