முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போரை அடுத்து இந்தக் கொரொனா ஒட்டுமொத்த உலகினையும் புரட்டிப் போட்டு, மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. அதே சமயம் பல லட்சம் பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். உலகமெங்கிலும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மற்ற துறைகளைப் போலவே சினிமாத்துறையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, 100 நாட்களாக ஷூட்டிங் நடைபெறா நிலையில் சினிமா கலைஞர்களும் , தயாரிப்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் மலையாள நடிகர்கள் சங்கம் கொரொனா காலம், முடிவடையும் வரை நடிகர், நடிகைகளின் சம்பளத்தைப் பாதியாகக் குறைக்க வலியுறுத்தியதை அடுத்து நடிகர், நடிகர்களும் ஒப்புக் கொண்டனர்.
தமிழ்த்திரைத்துறையில் உள்ள நடிகர் , நடிகைகள்,தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளத்தை 50% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுய். உச்ச நடிகர்கள் என்னிடம் பேசியுள்ளானர். இதற்குத் தயாரிப்பாளர்களும் ஆதரிக்கவுள்ளதாக மகிழ்ச்சிடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.