சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கிற்கு புத்துயிரூட்டியது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.
இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகியிருக்க வேண்டியது என்றாலும் கொரோனா தொற்று எனப்படுவதாலும், இன்னும் இதன் தீவிரத்தன்மை குறையவில்லை என்பதாலும் அரசு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அப்போது அனுமதி அளித்தது. ஆனாலும் படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது.
மாஸ் படங்களின் ஃபார்முலாவை மாற்றியுள்ளது நடிகர் விஜய்யின் மாஸ்டர் எனப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்றுப் படம் அமேசானில் நிகழ்த்திய வசூல் சாதனையை இப்படம் முறியடித்திடும் எனவும் நெட்டிசன் கூறி வருகின்றனர்.