விக்னேஷ் சிவனின் எல் ஐ சி திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

vinoth

திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:34 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒள்ப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். இப்போது தமிழகத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துள்ள விக்னேஷ் சிவன் அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்க சிங்கப்பூர் சென்று திரும்பியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நாளில் கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்