காமெடி படத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை!

Sinoj

வெள்ளி, 15 மார்ச் 2024 (18:29 IST)
நடிகை நித்யாமேனனின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை நித்யா மேனன்.  இவர் மலையாளம், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல் தமிழில், விஜயுடன் இணைந்து மெர்ஷல், உதய நிதியுடன் இணைந்து சைக்கோ, தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
 
இந்த நிலையில், நடிகை நித்யாமேனனின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
அதன்படி, பாக்ஸ் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கவுள்ளார்.
 
இப்படம் ரொமான்ஸ், காமெடி கலந்த பேண்டஸி படம் என கூறப்படுகிறது.
இப்படத்தை இயக்குனர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய காமினி இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோக்களாக வினய் நவ்தீப், பிரதீப் பாப்பர், தீபக் பரம்போல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்கவுள்ளனர்.
 
இதனால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்