இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்போது திடீரென லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஏற்கனவே தமிழில் பொன்னியின் செல்வன், விடுதலை ஆகிய திரைப்படங்கள் இதுபோல இரண்டு பாகங்களாக வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.