ஜி.வி.பிரகாஷின் ''அடியே'' பட டிரைலரை வெளியிட்ட தனுஷ்!

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (20:30 IST)
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அடியே. இப்படத்தை ஏன்டா தலையில எண்ண வைக்கல், திட்டம் ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கி வருகிறார்.

இப்படத்தில், வெங்கட்பிரபு, கவுரி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியான நிலையில், இப்படத்தில் பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

இந்த  நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று நடிகர் தனுஷ் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

இப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தியேட்டரில், வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best wishes team #Adiyae here is the trailer @gvprakash @vikikarthick88 @Maaliandmaanvi @Gourayy @vp_offl https://t.co/SAjwh7joAw

— Dhanush (@dhanushkraja) August 8, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்