“லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காது…” – தயாரிப்பு நிறுவனம் திடீர் முடிவு!

புதன், 27 செப்டம்பர் 2023 (07:01 IST)
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் என தகவல்கள் வெளியாகின. அதற்கான மேடை அமைக்கும் பணிகள் எல்லாம் நடந்து வந்த நிலையில் இப்போது இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு வெளியான ட்வீட்டில் “அதிகளவிலான பாஸ்களுக்கு வரும் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக  நாங்கள் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். ரசிகர்களின் ஆசைக்காக நாங்கள் படத்தின் அப்டேட்களை தொடர்ந்து வெளியிடுவோம்.

பலரும் நினைப்பது போல அரசியல் காரணங்களாலோ அல்லது பிற அழுத்தங்களாலோ இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை.” எனத் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்