விஜய்யின் 'லியோ 'பட இசை வெளியீட்டிற்கு பிரமாண்ட மேடை..வைரல் புகைப்படம்

செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (20:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ.

இந்தாண்டு பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் லியோ படமும் ஒன்று. இந்த நிலையில்,  லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

சமீபத்தில், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் லியோ பட போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த   நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதி  லியோ பட இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், இதற்காக ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  சென்னை உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், படக்குழு  மேடை அமைக்கும் பணிகளை கவனித்து வருகிறது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்