லியோ இசை வெளியிட்டு விழா தேதி: ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த புஸ்ஸி ஆனந்த்..!

திங்கள், 18 செப்டம்பர் 2023 (14:58 IST)
தளபதி விஜய் நடித்த லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என்று  கூறப்படும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்  
 
விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. இதில் பங்கேற்க விஜய் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் விஜய் மக்கள் இயக்கத்தின்  நிர்வாகிகள் மாவட்டத்திற்கு 200 பேர்கள் மட்டுமே அழைப்பு என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் சொந்த வாகனங்களில் தான் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் வரவேண்டும் என்றும் அரங்கின் வெளியே பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது என்றும் உரிய அனுமதி பெற்ற பின்னர் வைக்கலாம் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் விதித்துள்ளார். விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்