செப்டம்படர் 30 –ல் லியோ இசை வெளியீடு? உறுதி செய்த இயக்குனர் மிஷ்கின்!

சனி, 16 செப்டம்பர் 2023 (07:11 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் இசை வெளியீடு எப்போது நடக்கும் என்பது விஜய் ரசிகர்களின் கேள்வியாக அமைந்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் “லியோ இசை வெளியீடு சென்னையில்தான் நடக்கும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் மிஷ்கின் “லியோ படம் நல்லா வந்திருக்கு. விஜய் தம்பியும் படம் பாத்துட்டார். அவருக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. செப்டம்பர் 30 ஆம் தேதி சந்திப்போம்” எனக் கூறியிருந்தார். இதன் மூலம் செப்டம்பர் 30 ஆம் தேதி லியோ ஆடியோ வெளியீடு நடக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்