தயாரிப்பாளர் சொல்லியும் படப்பிடிப்பை தொடங்காத இயக்குனர் லெனின் பாரதி! ஏன் தெரியுமா?

செவ்வாய், 4 மே 2021 (17:06 IST)
இயக்குனர் லெனின் பாரதி தனது அடுத்த படத்துக்கான கள ஆய்வுகளை இப்போது செய்து வருகிறாராம்.

தமிழின் மிகச்சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக வெளியானது மேற்கு தொடர்ச்சி மலை. அந்த படத்தை 6 வருடங்கள் உருவாக்கினார். அதன் இயக்குனர் லெனின் பாரதி. அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

ஆனால் அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த திரைப்படம் தொடங்கப்படவில்லை. இது குறித்த செய்தி ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. திரைக்கதை எல்லாம் முடிந்துவிட்டாலும், கதைக்களமான திருவண்ணாமலையில் இயக்குனர் லெனின் பாரதி கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறாராம். தயாரிப்பாளர் பா ரஞ்சித் படத்தை தயாரிக்க துரிதப்படுத்தினாலும், கள ஆய்வுக்காக ஒரு ஆண்டு எடுத்துக் கொண்ட பின்னரே படத்தை ஆரம்பிக்க உள்ளாராம் லெனின் பாரதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்