சூர்யாவுக்காக தனது கடைசி கதையை எழுதிய இயக்குனர்… இனிமேல் என்னவாகுமோ?

செவ்வாய், 4 மே 2021 (16:48 IST)
இயக்குனர் கே வி ஆனந்த் தனது கடைசி கதையை நடிகர் சூர்யாவுக்காகதான் எழுதி வைத்திருந்தாராம்.

அயன், கோ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், முதல்வர், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களின் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு திரையுலகினரைச் சேர்ந்த கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவருடன் இணைந்து திரைக்கதை எழுதிவரும் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து ‘கே வி ஆனந்தோடு இணைந்து தேர்தல் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையை எழுதி இருந்தோம். அவர் அது குறித்து தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதற்குள் இந்த சோகம் நடந்து விட்டது’ எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் அவரின் கடைசி கதையில் நடிகர் சூர்யாதான் நடித்திருப்பதாக இருந்ததாம். சூர்யா மற்றும் கே வி ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான் மற்றும் காப்பான் ஆகிய படங்களில் இணைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்