பழம்பெரும் நடிகர் ரவீந்திர மகாஜனி மர்ம மரணம்

சனி, 15 ஜூலை 2023 (15:45 IST)
மராட்டியத்தில் பழம்பெரும் நடிகர் ரவீந்திர மகாஜனி அவரது வீட்டில் மர்ம மரணமடைந்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பழம்பெரும் நடிகர் ரவீந்திர மகாஜனி(77). இவர் மும்பை சாபாஜ்டார், ஜூன்ஜ் கலத்  நஹாலத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அஷூதோஷ் கவுர் இயக்த்தில், அர்ஜூன் கபூர் மற்று கீர்த்தி சனோன் ஆகிய நடிப்பில் வெளியான   பானிபட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், ரவீந்திர மகாஜனி அவரது இல்லத்தில் மர்ம மரணமடைந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸார் சம்பவ  இடத்திற்கு சென்று  அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்