ரஜினியோடு லால் சலாம் படத்தில் நடிக்க ஆசையா? – படக்குழு வெளியிட்ட அப்டேட்!

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (08:31 IST)
ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் மும்பையில் இந்த படத்துக்கான இசைப் பணிகளை ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இது சம்மந்தமான வீடியோவை ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரல் ஆகி வருகிறது. 

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த்நாளை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, இந்த படத்தில் நடிப்பதற்கான ஆடிஷன் நடப்பதாகவும், நடிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 25 ஆம் தேதி திருவண்ணாமலையில் நடக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்