கடவுள் தன் குழந்தையுடன் இப்படிதான் தொடர்புகொள்வார்.. லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா!

சனி, 18 மார்ச் 2023 (07:35 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்காக திருவண்ணாமலையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு பழமையான அம்மன் கோவிலில் சில காட்சிகளை படமாக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “இதை ஒரு தற்செயல் என்றும் சொல்லலாம். ஆனால் நான் இதைக் கடவுள் தன் குழந்தையுடன் தொடர்புகொள்ளும் ஒரு வழி என்றுதான் சொல்வேன்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்