சங்கமித்ரா படத்தில் இருந்து விலகும் விஷால்? அவருக்கு பதில் இவரா?

செவ்வாய், 7 மார்ச் 2023 (09:41 IST)
ஜெயம்ரவி, ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் சங்கமித்ரா. இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பதும் 2018ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இந்த படம் கால தாமதமாகி வருவதை அடுத்து அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் முன்பு ஒப்பந்தம் ஆகி இருந்த நடிகர் நடிகைகள் பலர் விலக, புதுக் கலைஞர்கள் ஒப்பந்தம் ஆகி வருகின்றனர். அந்த வகையில் ஜெயம் ரவிக்குப் பதில் விஷால் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட இருப்பதாலும், அதற்காக நீண்ட நாட்கள் நடிக்க வேண்டி இருக்கும் என்பதாலும், விஷால் சம்பளம் அதிகமாகக் கேட்டதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இப்போது அவர் படத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது அவருக்கு பதில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது போலவே சங்கமித்ரா வேடத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்