இதையடுத்து அவர் ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோரை வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் இரண்டுமே பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. அதனால் அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த கமிட்மெண்ட்களால் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் நானியை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்கிவிட்டு பின்னர் இந்த படத்தை சிபி தொடங்குவார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நானி –சிபி சக்ரவர்த்தி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாக இருந்த அந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.