தமிழில் மதுபானக்கடை உள்ளிட்ட கவனிக்கத் தகுந்த படங்களை இயக்கியவர் கமலக்கண்ணன். தற்போது இவர், ராசி அழகப்பன் எழுதிய கதையை மையமாக கொண்டு குரங்கு பெடல் என்ற சிறார்கள் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் ட்ரெய்லரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
படம் முழுக்க 90களின் காலக்கட்டத்தில் நடப்பதாக காட்டப்படுகிறது. வாடகை சைக்கிள் கடைகள், கோலி குண்டு விளையாட்டு, குளத்து நீச்சல் என 90ஸ் கிட்ஸின் வாழ்வியலை பிரதிபலிப்பதாக காட்சிகள் உள்ளன. முழுக்க சிறுவர்கள் மற்றும் அவர்களை மையப்படுத்தியே கதை நகைச்சுவையாக நகர்வதாக உள்ளது. இந்த ட்ரெய்லர் வளர்ந்த 90ஸ் கிட்ஸை ஈர்க்கும் விதத்தில் உள்ளது. ஏற்கனவே பல திரைப்பட விழாக்களில் இடம்பெற்று கவனம் பெற்ற குரங்கு பெடல் திரையரங்கிலும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.