இவங்க தான் குறளரசனின் மனைவியா! முதன்முறையாக வெளிவந்தது புகைப்படம்!

ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (13:25 IST)
இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், லிட்டில்  சூப்பர் ஸ்டார் சிம்புவின் சகோதரருமான, குறளரசன் காதலித்த பெண்ணை மணம்முடிப்பதற்காக முஸ்லீம் மதத்திற்கு மாறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. 


 
குறளரசனுக்கும் நபீலா அகமது என்ற பெண்ணுக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி நிக்காஹ் நடைபெறும் .  இதையடுத்து வரும் 29ஆம் தேதி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரமாண்டமான அளவில்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது எனவும் செய்திகள் வெளியானது. 
 
அந்தவகையில் தற்போது குறளரசன் மணக்கவிருக்கும் பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத். நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் – ரெஹ்மத் அஹ்மத்.  இவர்களுடைய திருமண வரவேற்பு விழா  (ஏப்ரல் 29-ம் தேதி) சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது எனவும் தகவல் கிடைத்துள்ளது.  


 
தற்போது குடும்பத்துடன் கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்