‘கும்கி 2’ ஹீரோயினாக அதிதி மேனன்

சனி, 29 ஜூலை 2017 (11:19 IST)
‘கும்கி’ இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அதிதி மேனன்.

 
 
‘பட்டதாரி’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி மேனன். அழகால் அனைவரையும் வசீகரிக்கும் இவர்தான், அமீர்  இயக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், பிரபு சாலமன் இயக்கவுள்ள ‘கும்கி’  இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அதிதி. முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்தவர் லட்சுமி மேனன். இதன்  படப்பிடிப்பு, கேரள வனப்பகுதிகளில் நடைபெற உள்ளது.
 
வழக்கம்போல காதலையும், யானையையும் வைத்து கதை சொல்லப் போகிறார் பிரபு சாலமன். இதில் யார் ஹீரோவாக  நடிக்கிறார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. துணை நடிகர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முதல்  பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாரே இந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் முதல் வாரம் ஷூட்டிங்  தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்