ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு சென்ற சுந்தர் சி படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திங்கள், 5 செப்டம்பர் 2022 (11:13 IST)
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குறிப்பாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏற்பட்ட பின்னர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பல முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘காபி வித் காதல் என்ற திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்ய உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘காபி வித் காதல்’ என்ற திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யவிருப்பதாகவும் வரும் அக்டோபர் 7ஆம் தேதி இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து மேலும் ஒரு முன்னணி இயக்குனரின் படத்தை விஜய் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்