சல்மான் கானை இயக்கும் கன்னட சூப்பர் ஸ்டார்…!

வியாழன், 14 அக்டோபர் 2021 (11:20 IST)
சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தை கிச்சா சுதீப் இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சல்மான் கானின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருக்கிறது. அவர் படங்கள் வசூலை வாரிக் குவிக்கின்றன. ஆனால் கடைசியாக அவர் நடித்த ராதே திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆனது. இதனால் உடனடியாக ஹிட் கொடுத்து மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ளவேண்டிய தேவையில் உள்ளார். இந்நிலையில் தபாங் 3 படத்தில் நடித்த போது கிச்சா சுதீப்புக்கும் சல்மான் கானுக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியுள்ளது.

இதனடிப்படையில் சுதீப் சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொலல்ப்படுகிறது. சுதீப் ஏற்கனவே சில கன்னட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்