பிரபல தயாரிப்பாளரும், ஜூனியர் என்.டி.ஆரின் பி.ஆர்.ஓ.வுமான மகேஷ் கொனேரு பத்திரிகையாளராக சினிமா துறையில் வேலை பார்க்க துவங்கினார். பின்னர் பட விமர்சகராக பிரபலமான அவர் 118 என்கிற படத்தை தயாரித்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் மற்றும் மாஸ்டர் படங்களை டோலிவுட்டில் விநியோகம் செய்துள்ளார். மேலும், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தின் மார்க்கெட்டிங் குழுவில் ஒருவராக இருந்தார்.