ரஜினியின் புதிய கட்சியின் பெயர் ? தமிழருவி மணியன் விளக்கம் !

புதன், 16 டிசம்பர் 2020 (19:36 IST)
ரஜினி மக்கள் சேவை என்ற பெயரில் பதிவு செய்துள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து தமிழருவி மணியன் அது உண்மையில்லை என்று தகவல் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை குறித்தும், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.#Rajinikanth

அதற்கு பிறகு ரஜினி தொடங்கும் புதிய கட்சியின் பெயர் “மக்கள் சேவை கட்சி” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு சின்னமாக பாபா திரைப்படத்தில் ரஜினி காட்டு இரட்டை விரல் சின்னம் கோரப்பட்டதாகவும் ஆனால் அதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம் அதற்கு பதிலாக ஆட்டோவை சின்னமாக வழங்கியுள்ளது என தகவல்கள் வெளியானது.

இதைமறுத்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி முறையான அறிவிப்புகள் வெளியாகும் வரை பொறுமை காக்கவும் என கூறியிருந்தது.

இந்நிலையில், மக்கள் சேவை கட்சி என்ற பெயர்  குறித்து இன்று செய்தியாளர்களுக்குப் பதிலளித்துள்ள தமிழருவி மணியன், ரஜினி கட்சியின் பெயர் குறித்து என்ன சொல்கிறாரோ அதுதான் பெயர். கட்சி குறித்து ரஜினியிடமிருந்து செய்தி வந்தால்தான் அது நிஜம் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்