பீஸ்ட் படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யுடன் சிவாங்கி & டான் இயக்குனர்- வைரல் புகைப்படங்கள்!

புதன், 27 ஏப்ரல் 2022 (10:17 IST)
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் பீஸ்ட்.

கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான படம் பீஸ்ட். இப்படத்தின் நடிகர் விஜய்- பூஜா ஹெக்டே நடித்திருந்தனர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் கலா நிதிமாறன் தயாரித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக சோடை போகவில்லை. இதையடுத்து சமீபத்தில் விஜய் படக்குழுவினருக்கு தன் வீட்டில் விருந்து வைத்திருந்தார்.


இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ் நடிகை சிவாங்கி பீஸ்ட் செட்டில் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் இடம்பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்