பிரஷாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கடந்த ஆண்டு வெளியான படம், `கே.ஜி.எஃப்'.
கன்னட படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 200 கோடி வசூல் ஈட்டியது. கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது.