ஜெயம் ரவி என்னுடைய க்ளையண்ட்… என்னை இந்த சர்ச்சையில் இழுக்காதீர்கள் – பாடகி கென்னிஷா பேட்டி!

vinoth

புதன், 25 செப்டம்பர் 2024 (15:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதியினரின் இந்த பிரிவுக்கு ஆர்த்திதான் காரணம் என்றும், அவர் ஜெயம் ரவி மேல் சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்து டார்ச்சர் செய்ததால்தால் இந்த முடிவை எடுத்தார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஜெயம் ரவி கோவாவைச் சேர்ந்த பாடகி ஒருவரோடு இப்போது டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் இந்த நெருக்கம்தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஜெயம் ரவி அதை மறுத்துள்ளார்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கென்னிஷா இதுபற்றி விளக்கமளித்துள்ளார். அதில் “ஜெயம் ரவி என்னுடைய கிளையண்ட் (கென்னிஷா ஒரு ஹீலர்). எங்கள் இருவருக்குமான நட்பு என்பது தொழில்முறை சார்ந்ததுதான். அவர் தன் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டுதான் என் சிகிச்சை மையத்துக்கு வந்தார். இது இன்னொருவரின் குடும்பப் பிரச்சனை. அதனால் இதில் இருந்து மற்றவர்கள் விலகி இருப்பதுதான் நல்லது. என்னை இதில் இழுக்காதீர்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்