தனுஷின் அடுத்த படத்தில் மீண்டும் கென் கருணாஸ்!

வியாழன், 31 மார்ச் 2022 (20:05 IST)
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் அவரது மகனாக நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடித்தவர் என்பதும் அவரது நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தனுஷ் நடித்து வரும் வாத்தி என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க கென் கருணாஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. தனுஷின் இரண்டு படங்களில் அடுத்தடுத்து கென் கருணாஸ் நடித்து வருவதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்