தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் முக்கிய அப்டேட்

வெள்ளி, 25 மார்ச் 2022 (22:16 IST)
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது
 
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒரு புதிய போஸ்டரின் மூலம் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்