வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ என சிவகார்த்திகயனோடு டூயட் பாடி நடித்த கீர்த்தி சுரேஷ், பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட நடிகையர் திலகம் படத்தில் நடித்தார். இந்த படம் அவரின் சினிமா கேரியரையே மாற்றி விட்டது.
இந்நிலையில், மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தை ஏற்க இருக்கிறார். மறைந்த பழம் பெரும் தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டிஆரின் சுய சரிதையை விவரிக்கும் படத்தை எடுக்கும் முயற்சியில் அவரின் மகன் பாலகிருஷ்ணா ஈடுபட்டுள்ளார். இப்படத்திலும், ஒரு காட்சியில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வேண்டும் என இப்படத்தின் இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி ஆசைப்பட்டாராம்.
இயக்குனர் கிரிஷ் மகாநதி படத்தில் இயக்குனர் நாகி ரெட்டி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அப்போது, கீர்த்தியின் அபார நடிப்பை கண்டு வியந்த அவர் என்.டி.ராமாராவ் படத்திலும் அவரை நடிக்க வைக்க வேண்டிம் என முடிவெடுத்ததாக தெரிகிறது.