விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இதன் ஃபர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. அத்துடன், ‘நான் தானா வீணா போனா’ என்ற பாடல், இன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சூர்யாவும், கீர்த்தி சுரேஷும் பாண்டிச்சேரிக்குப் போயிருக்கிறார்கள். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் அவர்கள், பாடலுக்குத் தேவையான ஒருசில காட்சிகளில் நடிக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியுடன் மொத்த படப்பிடிப்பும் முடிகிறது. அதன்பிறகு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ மற்றும் ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ க்ரீன்’ இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன.