வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ என சிவகார்த்திகயனோடு டூயட் பாடி நடித்த கீர்த்தி சுரேஷ், பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட நடிகையர் திலகம் படத்தில் நடித்தார். இந்த படம் அவரின் சினிமா கேரியரையே மாற்றி விட்டது.
இந்நிலையில், ராஜமவுலி ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் வைத்து ஆர்.ஆர்.ஆர். என்ற ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை படக்குழு அணுகியுள்ளனர் எனவும், இப்படத்தில் அவர் கண்டிப்பாக நடிக்க இருக்கிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.